பட்டு வளர்ப்பு:
விவசாயிகளே உங்களுக்கான பதிவு, ஒருமுறை முதலீடு 20 வருடங்களுக்கு மேல் வருமானம்??? மாதம் ஒருமுறை வருமானம், வேறு எந்த தொழிலும் இல்லாத அளவு வருமானம். ஒரு ஏக்கர் நிலத்தில் மாதா மாதம் ரூ.20k முதல் 30k வரை சம்பாதிக்கலாம். மேலும் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டதை போக்கும் ஒரு நல்ல சிறந்த தொழில்.
பட்டு வளர்ப்பு பற்றி அறிமுகம்:
நம்ம இந்திய பாரம்பரிய நிகழ்ச்சிகள் எல்லாத்துலயும் பட்டு உடை என்கிறது இன்றியமையாத ஒன்று , பட்டு இந்திய அளவிலும் தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அளவிலும் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பங்கு கொண்டுள்ளது. நம்ம நாட்டுல உற்பத்தி செய்யுற பட்டு நம்ம தேவைகளுக்கு பற்றாக்குறையாக இருக்கு, அதனால் நம்ம அரசு சீனா கிட்ட இறக்குமதி பண்ணி நம்ம தேவைகளை பூர்த்தி செய்கிறது, இந்த நிலை மாற்ற உங்களால தான் முடியும். பட்டு வளர்ப்பு நாம செய்யுறதால் நம்ம வருமானமும் அதிகமா கிடைக்கும் , நம்ம நாட்டோட பொருளாதாரமும் அதிகமாகும் சீனா கிட்ட நாம கையேந்த வேண்டியதும் இல்ல.
பட்டு வளர்ப்பு செய்ய வழிமுறைகள்:
பட்டு வளர்ப்பு செய்ய முதலில் தோட்டத்தை நன்கு உழுது அதன் பிறகு சனப்பை(sunhemp) தக்கைப்பூண்டு (Daincha) ஆகிய பசுந்தாள் பயிர்களை பயிரிட்டு 45 நாட்கள் கழித்து அந்த பசுந்தாள் பயிர்களை மடக்கி உழவு செய்ய வேண்டும் , அவ்வாறு செய்வதால் மண்ணின் அங்கக சத்துக்கள் அதிகரிக்கும் மேலும் மண்ணுக்கு வளம் சேர்க்கும்.
அதன் பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதம் வயதுடைய மல்பெரி நாற்றுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.(மல்பெரி நாற்றுக்களை தங்கள் அருகிலுள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்)
தோட்டத்தில் நல்ல ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு படத்தில் காட்டியுள்ளபடி 3+5)*2 இடைவெளி விட்டு ஒரு அடி ஆழ குழியுனுள் தொழு உரம் மற்றும் மேல் மண் கலந்து போட்டு மல்பெரி நாற்றின் தாய் குச்சி மண்ணிற்குள் இருக்கும்படியும் அதன் தண்டுப்பகுதி மண்ணிற்கு மேல் உள்ளபடியே நடவு செய்து நன்றாக மண்ணை அமுக்கி விட வேண்டும். தோட்டத்தில் நன்றாக மட்கிய எருவை ஏக்கருக்கு 8 டன் வீதம் போட வேண்டும்.பின்னர் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து உயிர் நீர்(life irrigation) விடவேண்டும். பின்னர் நாற்றுக்கள் துளிர் விட ஆரம்பித்தவுடன் வாரம் இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும் அல்லது சொட்டுநீர் பாசனம் மூலம் நிலம் காயாமல் நீர் பாய்ச்ச வேண்டும்.அதன் பிறகு பயறு வகைகள் அல்லது குறுகிய கால பயிர்களை ஊடு பயிராக நடவு செய்யலாம்.
பட்டுப்புழு இயற்கையான சத்தான மல்பெரி இலையை மட்டுமே உண்டு வாழ்வதால் இதற்கு தொழு உரம் ,மண்புழு உரம் போன்றவற்றை மட்டுமே உரமாக கொடுக்கலாம் தேவை இருப்பின் மட்டுமே இரசாயன உரங்களை உபயோகப்படுத்த வேண்டும்.
புழுவளர்ப்பு செய்தல்:
மல்பெரி நடவுசெய்த 100 நாட்கள் கழித்து நாம் புழு வளர்ப்பு செய்ய தொடங்க வேண்டும், அதற்குள் புழு வளர்ப்பு மனை அமைக்க வேண்டும்
புழு வளர்ப்பு மனை:
புழு வளர்ப்பு மனை
புழு வளர்ப்பு மனையானது நல்ல காற்றோட்ட வசதியுடன் படத்தில் உள்ளபடி கூரை,தார்சு,ஓடு எதில் வேண்டுமானாலும் கூரை அமைத்து தரை நன்றாக பூசப்பட்டு, சுவர்கள் காற்றோட்டமாக இருக்கும்படி அமைக்கவேண்டும், சூரிய வெளிச்சம் நேரடியாக படாமலிருக்க மனையை வடக்கு,தெற்காக அமைக்க வேண்டும், மனையை சுற்றிலும் தாழ்வாரம் அமைத்து வெப்பதிலிருந்து பாதுகாக்க வேண்டும்
மனையினுள் புழு வளர்க்க தேவையான தாங்கிகள் அமைக்க வேண்டும்.
தாங்கிகள் 100 முட்டை தொகுதி வளர்க்க 1200 ச.அடி இருக்கும்படி அமைக்க வேண்டும்.
மனை வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு புழு வளர்ப்பு தொடங்க வேண்டும்.
இளம்புழு வளர்ப்பு மையம்:
முந்தைய நாட்களில் விவசாயிகள் முட்டையாக பெற்று அதிலிருந்து வரும் பட்டு புழுக்களை 5 பருவங்கள் வளர்த்து கூடுகட்ட வைத்து அந்த கூட்டினை அறுவடை செய்து விற்பனை செய்வார்கள். பட்டுப்புழுவளர்ப்பில் முதல் 2 பருவங்கள் மிகவும் கவனமாக பார்க்கவேண்டியது அவசியம் சில விவசாயிகள் தொழில்நுட்பங்கள் தெரியாமல் தவறாக வளர்ப்பதால் 4 ஆம் 5 ஆம் பருவங்களில் புழு வளர்ச்சி இன்றி நோய் தாக்கி இறந்து லாபம் கிடைக்காமல் போகும்..ஆனால் இந்த இளம்புழு வளர்ப்பு மையம்வந்த பிறகு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து தரமான முறையில் முதல் 2 பருவங்கள் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.விவசாயிகள் அதற்கான தொகையினை செலுத்தி இலையின் அளவிற்கு ஏற்ப எத்தனை முட்டை தொகுதி வேண்டுமோ அந்த அளவிற்கு பெற்று புளுவளர்ப்பு செய்ய வேண்டும்.
முட்டை தொகுதி:
முட்டைதொகுதி என்பது ஒரு முதிர்ந்த பெண்(படத்தில் உள்ளது)பட்டுப்பூச்சி இடும் நோயற்ற மொத்த முட்டைகளின் எண்ணிக்கை (ஆங்கிலத்தில் DFLS-Disease Free Layings) அதாவது நோயற்ற ஓர் பெண் அந்துப்பூச்சி 450 முதல் 600 எண்ணிக்கையிலான முட்டைகளை இடும் அதுவே ஒரு முட்டை தொகுதி.
ஓர் ஏக்கர் பரப்பளவில் நன்றாக வளர்க்கப்பட்ட மல்பெரி செடிகளில் இருந்து பெறப்படும் இலைகளை இரண்டாக பிரித்து மாதம் ஒரு முறை அதாவது ஒரு ஏக்கர்ல் பாதி அரை ஏக்கர் பரப்பளவில் கிடைக்கும் இலைகளை கொண்டு 100 முட்டை தொகுதிகள் வளர்க்கலாம்
100 முட்டதொகுதிகளுக்கு 80 முதல் 100 கிலோ பட்டு கூடு அறுவடை செய்யலாம்,
ஒரு கிலோ பட்டு கூடின் விலை சராசரியாக ₹400-500/-
தோராயமாக வரவு
80*400 ₹32000
100*400 ₹40000
80*500 ₹40000
100*500 ₹5000
கூடுகளின் விலை தரத்தினை பொறுத்து மாறுபடும். நல்ல தரமான கூடுகள் அதிக விலைக்கு போகும்.. கூடு விற்பனை அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மட்டுமே நடைபெறும். தமிழகத்தில் தர்மபுரி,கோவை,ஓசூர்,ஈரோடு,உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
தோராயமாக வருமானம் கணக்கீடு:
80 கிலோவுக்கு 400 ரூபாய் என்றால் ₹32000 கிடைக்கும்
செலவு அதிகபட்சம் ₹10000 எனில்
நிகர லாபம். ₹20000 முதல் 22000 வரை கிடைக்கும் ஆண்டுக்கு 2,00,000 முதல் 2,20,000 கிடைக்கும
முதலீடு. ₹3,00,000 முதல் ₹4,00,000 லட்சம் வரை செலவாகும் அரசு மானியமாக 1 லட்சம் வழங்கினாலும் ஒரு வருடத்தில் முதலீடு தொகை கிடைத்து விடும். அதன் பிறகு 20 ஆண்டுகள் வரை லாபம் மட்டுமே..
விவசாயிகளே இது மட்டுமல்ல பட்டு வளர்ச்சித்துறை என்ற தனி அரசு துறையே உங்களுக்கு உதவ தயாராக உள்ளது ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுவீர், மேலும் இந்த துறை மூலம் பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
1. மல்பெரி நடவு ஏக்கருக்கு ₹10500
2.புழு வளர்ப்பு மனை அமைக்க
₹87500
3. புழு வளர்க்க தேவையான உபகரணங்கள்
₹52,500
4. சொட்டு நீர் பாசனம் அமைக்க பெரு விவசாயிகளுக்கு 75%,சிறு , குறு விவாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது.
(2019-2020 ஆண்டு திட்டப்படி)
மேலும் பெண்களுக்கு உகந்த சிறப்பான தொழில் அதிக பணி சுமை இல்லாத நல்ல வருமானம் தரக்கூடிய ,நஷ்டம் இல்லாத ஒரே தொழில் பட்டு வளர்ப்பு.
மல்பெரி பயிர் செய்து பயன் பெறுவீர்...
பட்டு வளர்த்து வாழ்வில் பட்டொளி வீச செய்வீர்.....
மேலும் தகவல்களுக்கு
www.tnsericulture.gov.in
என்ற தளத்தை பார்க்கவும்
நன்றி,
வாழ்க தமிழ்,
வளர்க விவசாயம்......