Home

https://exploringmyviewstamil.blogspot.com/p/about-us.html

Adventurous place in tamilnadu

 தெங்குமரஹடா:


நீலகிரி மாவட்டம் என்று அழைக்கப்படும் உதகையின் மலைச்சரிவின் கீழ் பகுதியில் கோத்தகிரி தாலுக்காவில் அமைந்துள்ளது இந்த தெங்குமரஹடா..

என்னதான் இந்த பகுதி நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும்கூட இதற்கு செல்ல நாம் ஈரோடு மாவட்டம் வழியாகத்தான் செல்லமுடியும் ஆம்,கோத்தகிரியில் இருந்து தெங்குமரஹடா வரை இரண்டு பேருந்துகள் இயங்குகின்றன.கோத்தகிரியில் இருந்து தெங்குமரஹடா செல்ல மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் வரவேண்டும் அங்கிருந்து பேருந்து வழியாகவோ அல்லது தனியார் வாகனம் வழியாகவோ 2மணி நேரம் காட்டு பாதை வழியாக பயணம் செய்து தெங்குமரஹடா செல்ல வேண்டும். 


தெங்குமரஹடாவிற்கு பவானிசாகர் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 12.00 AM. மணிக்கு பேருந்து புறப்பட்டு 2.00PMமணிக்கு தெங்குமரஹடா செல்லும். அங்கு அரைமணிநேரம் நின்று விட்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றுவிடும்.அடுத்த பேருந்து இரவு 7மணிக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டு காலை 6மணிக்கு பேருந்து கிளம்பும் . ஒரு முறை வந்துவிட்டால் அடுத்த நாள் காலையில்தான் ஊரை விட்டு வரமுடியும். அதனால் வனத்துறையினர் மக்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையின் முன் அனுமதியுடன் தங்க இடம் தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும்.

பேருந்தில் இருந்து இறங்கி ஊருக்குள் செல்ல மாயாறு என்ற ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும்.இந்த மாயாறு ஊட்டியில் இருந்து வருவதால் திடீரென்று மழை பெய்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்துவிடும் மாயாற்றில்நீர் குறைவாக இருக்கும் போது மட்டுமே ஆற்றை தாண்ட முடியும் சில நேரங்களில் நீர் திடீரென்று அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. மேலும் ஆற்றை கடக்க பரிசல் ஓட்டிகள் உள்ளனர் அவர்களின் உதவியோடு நாம் கரைக்கு சென்று ஊருக்குள் போகலாம். ஊருக்குள் தனியார் தங்க ஓரிரு வீடுகள் வாடகைக்கு உள்ளது, மேலும் 3 டீ கடை மற்றும் உணவு கடைகள் உள்ளது, அனைத்து பொருட்களும் பவானிசாகரில் இருந்து வாங்கி வரப்படுகிறது.


தெங்குமரஹாடா மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மட்டுமே ஆகும். இந்த பகுதி பல தலைமுறைகளுக்கு முன்னால் ஆடு மேய்க்கும் மக்கள் வந்து தங்கி மேய்ச்சல் நிலமாக இருந்தது. பின்னர் அரசு இங்கு வாழ்ந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டுறவு சங்கம் அமைத்து அதன் மூலம் இங்கு உள்ள நிலம் மற்றும் நீர் ஆகியவற்றை இங்கு வாழ்ந்த மக்களுக்கு பிரித்துக்கொடுத்தது. அதில் அவர்கள் வாழ்ந்து அனுபவிக்க மட்டும் அனுமதி வழங்கியது, அந்த நிலத்தை விற்கவோ,தானமாக வழங்கவோ,குத்தகைக்கு விடவோ முடியாது. 

நல்ல இயற்கை சூழலுடன் சுற்றிலும் மலைகளுடன் ரம்மியமாக இருக்கும் இந்த ஊர் ஒரு தனி தீவு என்றே கூறலாம்.